/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அவளூரில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்த கலெக்டரிடம் மனு
/
அவளூரில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்த கலெக்டரிடம் மனு
அவளூரில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்த கலெக்டரிடம் மனு
அவளூரில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்த கலெக்டரிடம் மனு
ADDED : நவ 28, 2025 04:40 AM
காஞ்சிபுரம்: 'அவளூர் ஊராட்சியில் உள்ள டி.எஸ்.பி., சிட்டி நகரில், தெரு மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்' என, இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளன மாவட்ட தலைவர் சீனிவாசன், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
காஞ்சிபுரம் ஒன்றியம், அவளூர் ஊராட்சி, டி.எஸ்.பி., சிட்டி நகர், ஆஞ்சநேயர் கோவில் தெருவில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 10 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில், 20 மின்கம்பங்கள் இருந்தும், மின்விளக்கு பொருத்தவில்லை. இதனால், இரவு நேரத்தில் இப்பகுதியில் பாம்பு, தேள், விஷ பூச்சி நடமாட்டம் உள்ளதால், குழந்தைகள், பெண்கள் இரவு நேரத்தில் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.
எனவே, டி.எஸ்.பி., சிட்டி நகர், ஆஞ்சநேயர் கோவில் தெருவிற்கு, மின்விளக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

