/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை சேதமடைந்து பள்ளங்கள் அதிகரிப்பு கரூரில் வாகன ஓட்டிகள் அவதி
/
சாலை சேதமடைந்து பள்ளங்கள் அதிகரிப்பு கரூரில் வாகன ஓட்டிகள் அவதி
சாலை சேதமடைந்து பள்ளங்கள் அதிகரிப்பு கரூரில் வாகன ஓட்டிகள் அவதி
சாலை சேதமடைந்து பள்ளங்கள் அதிகரிப்பு கரூரில் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : நவ 28, 2025 04:40 AM

வாலாஜாபாத்: கரூர் சாலையில் பழுதடைந்து ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு கூட்டுச்சாலையில் இருந்து, புத்தகரம், கரூர் வழியாக ராஜகுளம் செல்லும் சாலை உள்ளது.
வாலாஜாபாத் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் செங்கல்பட்டு, ஒரகடம் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை விரைவாக அடைய, இச்சாலை பயன்படுகிறது.
குறைந்த நேரத்தில் எளிதாக சென்னை - பெங்களூரு ராஜகுளம் சாலையை சென்றடைய, இச்சாலை பயன்பட்டு வருகிறது.
இச்சாலையில், கரூர் குடியிருப்பு பகுதி சாலை மற்றும் ஏரிக்கரை அருகாமையிலான சாலை பகுதிகளில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும், குழியுமாக உள்ளது.
குடியிருப்பு அருகாமையிலான சாலையின் ஒரு வளைவு பகுதியில் அபாயகரமான பள்ளம் உள்ளது.
இதனால், இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், தினசரி அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் விபத்து சம்பவங்களும் ஏற்படுகின்றன.
எனவே, கரூர் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைத்து, விபத்து அபாயத்தை தவிர்க்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

