/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருமுக்கூடல் பாலாற்று பாலத்தில் மண் குவியல்
/
திருமுக்கூடல் பாலாற்று பாலத்தில் மண் குவியல்
ADDED : நவ 26, 2024 03:52 AM

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் பாலாற்றின் மீது பாலம் கட்டப்பட்டு, திருமுக்கூடல், சாலவாக்கம், வயலாக்கவூர், பழவேரி உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர், போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
பாலத்தின் மீது அருங்குன்றம், சிறுதாமூர் ஆகிய இடங்களில், குவாரிகளில் வெடி வைத்து தகர்க்கப்படும் கற்களை, கிரஷர் வாயிலாக உடைத்து எம்.சாண்ட், ஜல்லி கற்கள் மற்றும் கிராவல் மண் ஆகியவை லாரிகள் வாயிலாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
அப்போது, லாரியிலிருந்து மண் சிதறி, பாலத்தில் மண் குவியல் உருவாகிறது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
எனவே, பாலத்தில் மண் குவியலை அகற்ற, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.