/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஈஞ்சம்பாக்கம் சாலையில் கட்டுமான பொருட்கள் குவியல்
/
ஈஞ்சம்பாக்கம் சாலையில் கட்டுமான பொருட்கள் குவியல்
ADDED : மார் 17, 2024 02:00 AM

காஞ்சிபுரம்:கூரம் கேட் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, ஈஞ்சம்பாக்கம் கிராமம் வழியாக, சிறுவாக்கம் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இச்சாலை ஓரம், ஆதிராவிட நலத்துறை அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், செம்பரம்பாக்கம், பெரிய கரும்பூர், கூரம், சிறுவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவ- - மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளிக்கு செல்லும் சாலை குறுக்கே, ஜல்லி மற்றும் எம்.-சாண்ட் கொட்டி உள்ளனர். இதனால், பள்ளிக்கு செல்லும் மாணவ- - மாணவியர் சாலை வழியாக செல்வதை விடுத்து, மண் சாலையில் செல்கின்றனர்.
இதுபோன்ற நேரங்களில் வாகனங்கள் நிலை தடுமாறி கவிழும் அபாயம் உள்ளது. மேலும், இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர், ஜல்லி குவியல் மீது மோதி நிலை தடுமாறி கவிழும் அபாயம் உள்ளது.
எனவே, ஈஞ்சம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் சாலை குறுக்கே கொட்டிய ஜல்லி மற்றும் மண் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

