/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சீரமைத்த 3 மாதங்களிலேயே பினாயூர் சாலை மீண்டும் சேதம்
/
சீரமைத்த 3 மாதங்களிலேயே பினாயூர் சாலை மீண்டும் சேதம்
சீரமைத்த 3 மாதங்களிலேயே பினாயூர் சாலை மீண்டும் சேதம்
சீரமைத்த 3 மாதங்களிலேயே பினாயூர் சாலை மீண்டும் சேதம்
ADDED : அக் 28, 2024 11:38 PM

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், பினாயூரில் இருந்து, அப்பகுதி மலை வழியாக பழையசீவரம் இணைப்புச் சாலை செல்கிறது.
பினாயூர், சீட்டணஞ்சேரி, சாத்தணஞ்சேரி பழவேரி உள்ளிட்ட கிராமத்தினர், இந்த சாலையை பயன்படுத்தி, திருமுக்கூடல் பாலாற்று மேம்பாலம் வழியாக, வாலாஜாபாத், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.
குண்டும், குழியுமாக இருந்த இச்சாலையை சீரமைக்க, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு 1.57 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சாலை அமைக்கும் பணி, கடந்தாண்டு ஆகஸ்டில் முடிவடைந்தது.
பினாயூரில் உள்ள தனியார் கிரஷர் மற்றும் எம்.சான்ட் தொழிற்சாலைகளால், இச்சாலையில் அதிக அளவு லாரிகள் இயக்கப்படுகின்றன.
இதனால், அச்சாலையை சீரமைத்த அடுத்த மூன்று மாதங்களில், மீண்டும் சேதமடைந்து தற்போது குண்டும், குழியு மாக காணப்படுகிறது.
இதனால், இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் தினசரி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மழை நேரங்களில் சாலை மிகவும் சகதியாகிறது. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பினாயூர் சாலையை மீண்டும் சீரமைத்து தர, அப்பகுதி வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.