/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு 'ரன்வே'யில் பயணியருடன் நிறுத்தம்
/
விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு 'ரன்வே'யில் பயணியருடன் நிறுத்தம்
விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு 'ரன்வே'யில் பயணியருடன் நிறுத்தம்
விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு 'ரன்வே'யில் பயணியருடன் நிறுத்தம்
ADDED : ஏப் 08, 2025 12:54 AM
சென்னை, சென்னை விமான நிலையத்தில் இருந்து, இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு, 'ஏர் - இந்தியா' விமானம், நேற்று காலை 5:45 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அனைத்து சோதனைகள் முடிந்து, 154 பயணியர் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். காலை 6:00 மணிக்கு, 'ரன்வே'யில் விமானம் ஓடத் துவங்கியது. சிறிது நேரத்தில், விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. இதையடுத்து, ரன்வேயிலே அவசரமாக விமானம் நிறுத்தப்பட்டது. பின், இது குறித்து விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு, விமானி தகவல் தந்தார்.
இதையடுத்து, இழுவை வண்டி வரவழைக்கப்பட்டு, கோளாறை சரிசெய்யும் பணியில், ஊழியர்கள் குழுவினர் இறங்கினர். பயணியர் விமானத்தின் உள்ளேயே அமர வைக்கப்பட்டனர். காலை 7:00 மணிக்கு கோளாறு சரி செய்யப்பட்டு, 7:40 மணிக்கு விமானம் கொழும்புவிற்கு புறப்பட்டது.
அடிக்கடி பிரச்னை
'ஏர் - இந்தியா மற்றும் ஏர் - இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவனங்களின் விமானங்கள், அடிக்கடி இயந்திர கோளாறு, தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உள்ளாகின்றன.
குறிப்பாக உள்நாடு மட்டுமின்றி, சர்வதேச நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்படுவது, ரத்து செய்வது போன்றவை அதிகரித்து வருகின்றன.
பயணியருக்கு சிரமமின்றி சேவைகள் வழங்க, மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.