/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வெங்கச்சேரியில் 4 நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டுவதற்கு திட்டம்
/
வெங்கச்சேரியில் 4 நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டுவதற்கு திட்டம்
வெங்கச்சேரியில் 4 நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டுவதற்கு திட்டம்
வெங்கச்சேரியில் 4 நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டுவதற்கு திட்டம்
ADDED : ஆக 28, 2025 01:31 AM
உத்திரமேரூர்:-வெங்கச்சேரியில் 300 டன் கொ ள்ளளவு கொண்ட நான்கு நெல் சேமிப்பு கிடங்குகள் கட்ட, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினர் திட்டமிட்டு உள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியத்தில், 73 ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள, கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இங்குள்ள, விவசாயிகள் ஆண்டுதோறும் குறுவை, நவரை, சொர்ணவாரி ஆகிய மூன்று பருவங்களைச் சேர்த்து, 38,000 ஏக்கர் பரப்பளவில் 91,200 டன் நெற்பயிர் சாகுபடி செய்கின்றனர்.
அவ்வாறு சாகுபடி செய்து அறுவடை செய்யும் நெல்லை, விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். விற்பனை செய்த நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினர் உத்திரமேரூரில் உள்ள சேமிப்பு கிடங்கில் சேமித்து வந்தனர்.
சில நேரங்களில் நெல் சேமிப்பு கிடங்கில் போதிய இடவசதி இல்லாததால், திறந்த வெளியிலே நெல்லை சேமித்து வந்ததால், நெல் சேதமடைந்து வந்தது.
இந்நிலையில், உத்திரமேரூர் தாலுகா, வெங்கச்சேரி பகுதியில் நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், வெங்கச்சேரியில் தலா, 300 டன் கொள்ளளவு கொண்ட, நான்கு நெல் சேமிப்பு கிடங்குகள், 9 லட்சம்  ரூபாய் மதிப்பில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'உத்திரமேரூர் தாலுகா, வெங்கச்சேரி கிராமத்தில், தலா, 300 டன் கொண்ட நான்கு நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டுவதற்காக டெண்டர் விடுவதற்கான பணிகள் நடந்து வருகிறது' என்றார்.

