/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குறுங்காடு அமைவிடத்தில் 300 மரக்கன்றுகள் நடவு
/
குறுங்காடு அமைவிடத்தில் 300 மரக்கன்றுகள் நடவு
ADDED : ஜூலை 05, 2025 10:26 PM
திருமுக்கூடல்:திருமுக்கூடலில் குறுங்காடு அமைக்கும் பகுதியில் மூன்றாம் கட்டமாக நேற்று, 300 மரக்கன்றுகள் நடப்பட்டன.
உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல், மதுார், சிறுதாமூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், 10 ஆண்டுகளுக்கு மேலாக கல் குவாரி மற்றும் கிரஷர்கள் இயங்குகிறது.
இதனால், தொழிற்சாலை புகை மற்றும் மண் புழுதி போன்றவையால் சுற்றுச்சூழல் தொடர்ந்து மாசடைந்து வருகிறது.
எனவே, இப்பகுதியில் பசுமை மற்றும் இயற்கை அரண் ஏற்படுத்துதல் அவசியம் என, பல தரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர்.இதனிடையே இப்பகுதிகளில் காற்று மாசடைவதை தவிர்க்கும் நோக்கில், திருமுக்கூடலில் குறுங்காடு அமைக்க சங்கல்ப்தாரு பவுண்டேஷன் முன்வந்தது.
இதற்காக அப்பகுதி ஏரிக்கு அருகாமையில் குன்று பகுதியையொட்டி உள்ள 50 ஏக்கர் பரப்பிலான நிலம் தேர்வு செய்யப்பட்டு, ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறப்பட்டது.
அதை தொடர்ந்து, ஏற்கனவே இரண்டு கட்டமாக 4,000க்கும் மேற்பட்ட மரகன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மூன்றாம் கட்டமாக நேற்று வில்வம், மகாகணி, புங்கன், பூவரசன், நாவல், வேம்பு, இலுப்பை உள்ளிட்ட வகைகளை சேர்ந்த 300 மரக்கன்றுகள் நடப்பட்டன.
சங்கல்ப்தாரு பவுண்டேஷன் நிர்வாகிகள் மற்றும் திருமுக்கூடல் ஊராட்சி தலைவர் மஞ்சுளாமுருகன், விதைகள் தன்னார்வ அமைப்பினர் உள்ளிட்டோர் மரக்கன்றுகள் நடவு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அடுத்தடுத்து 30,000 மரக்கன்றுகள் வரை நடவு செய்ய உள்ளதாகவும், அதை பராமரித்து மூன்று ஆண்டுகளுக்கு பின், ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.