/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
களியனுார் குளம், ஏரிக்கரையில் 5,000 பனை விதைகள் நடவு
/
களியனுார் குளம், ஏரிக்கரையில் 5,000 பனை விதைகள் நடவு
களியனுார் குளம், ஏரிக்கரையில் 5,000 பனை விதைகள் நடவு
களியனுார் குளம், ஏரிக்கரையில் 5,000 பனை விதைகள் நடவு
ADDED : செப் 28, 2025 01:23 AM

களியனுார்:களியனுார் குளக்கரை மற்றும் ஏரிக்கரையில், 5,000 பனை விதைகள் நடவு செய்யும் துவக்க விழா நடந்தது.
பசுமை இந்தியா தன்னார் வ அமைப்பு சார்பில், காஞ்சிபுரம் அடுத்த, களியனுார் குளக்கரை மற்றும் ஏரிக்கரையில், 5,000 பனை விதைகள் நடவு செய்யும் துவக்க விழா நேற்றுமுன்தினம் நடந்தது.
இதில், தொழிலதிபர்கள் பிரபு, முருகேஷ், காஞ்சிபுரம் மாவட்ட மரம் வளர்ப்போர் சங்க தலைவர் மாசிலாமணி, களியனுார் ஊராட்சி தலைவர் வடிவுக்கரசி ஆகியோர் பனை விதை நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
இதில், பசு மை இந்தியா தன்னார்வ அமைப்பினருடன், கா.மு.சுப்பராய முதலியார் பள்ளி மாணவர்கள், ஏனாத்துார் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நாட்டு நல பணித் திட்ட மாணவர்கள், மகிழம், சர்வம், காஞ்சி அன்னசத்திரம், காஞ்சிபுரம் கிராண்ட் ரோட்டரி உள்ளிட்ட தன்னார்வலர்கள் இணைந்து பனை விதைகளை நடவு செய்தனர்.