/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
1,000 மரக்கன்றுகள் உத்திரமேரூரில் நடவு
/
1,000 மரக்கன்றுகள் உத்திரமேரூரில் நடவு
ADDED : அக் 26, 2025 11:00 PM

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள சாலையோரங்களில், 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கடல்மங்கலம், தோட்டநாவல், சடச்சிவாக்கம், இடையம்புதுார், நெல்லிமேடு, சாலவாக்கம் ஆகிய கிராமங்களில், ஐந்து மாதத்திற்கு முன் ஒன்றிய தார் சாலைகள் புதுப்பிக்கப்பட்டன.
அவ்வாறு புதுப்பிக்கப்பட்ட புதிய ஒன்றிய தார் சாலையோரங்களில், வாகன ஓட்டிகளுக்கு பசுமை சூழல் ஏற்படுத்தும் விதமாக, மரக்கன்றுகள் நடவு செய்ய, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தீர்மானித்தது.
அதையடுத்து, கடல்மங்கலம் பகுதியில் உள்ள சாலையில் மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி, உத்திரமேரூர் ஒன்றிய தலைவர் ஹேமலதா தலைமையில் நேற்றுமுன்தினம் நடந்தது.
ஒன்றிய துணை தலைவர் வசந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூர்யா, மாணிக்கவேலு முன்னிலை வகித்தனர். உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வை துவக்கி வைத்தார்.
அதை தொடர்ந்து, தோட்டநாவல், சடச்சிவாக்கம், இடையம்புதுார், நெல்லிமேடு, சாலவாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள சாலையோரங்களிலும் மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. வனக்குழு தலைவர் வீராசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

