/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிறுகாவேரி ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு
/
சிறுகாவேரி ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு
ADDED : அக் 09, 2024 12:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், சிறுகாவேரிபாக்கம் ஏரிக்கரையில், பன்னாட்டு லயன் சங்கம், பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பு, துாசி பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில், 10,000 பனை விதை நடவு செய்யும் துவக்க விழா நேற்று நடந்தது.
இதில், பல்வேறு சேவை அமைப்புகள், தன்னார்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வாயிலாக, விழாவின் துவக்க நாளான நேற்று, ஒரே நாளில், 2,000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.