/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நுாலகர் தின விழாவில் மரக்கன்றுகள் நடவு
/
நுாலகர் தின விழாவில் மரக்கன்றுகள் நடவு
ADDED : ஆக 13, 2025 01:54 AM
காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம் அண்ணா கிளை நுாலகத்தில் நேற்று நடந்த நுாலகர் தின விழாவில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்திய நுாலக அறிவியலின் தந்தை என அழைக்கப்படும் எஸ்.ஆர்.ரங்கநாதனின் 133வது பிறந்த நாளையொட்டி சின்ன காஞ்சிபுரம் அண்ணா நுாலகத்தில் நேற்று நுாலகர் தின விழா நடந்தது. ரங்கநாதனின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காஞ்சிபுரம் கிளை நுாலகத்தில் உறுப்பினராக சேர்ந்த, 15 மாணவர் களுக்கு காஞ்சி அன்னசத்திரம் சார்பில் உறுப்பினர் அட்டை வழங்கப் பட்டது.
விழாவையொட்டி, நுாலக வளாகத்தில், மலைவேம்பு, அசோகா, மந்தாரை, பாதாம், நெல்லி, செம்பருத்தி, பாரிஜாதம், தங்க அரளி உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
அண்ணா நுாலகம், நேரு நுாலகம் உள்ளிட்ட நுாலக பொறுப்பாளர்கள், பசுமை இந்தியா அறக்கட்டளை, காஞ்சி அன்னசத்திரம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்பினர் மரக்கன்று நட்டனர்.

