/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வழிமறிக்கும் செடி, கொடிகள் பாதசாரிகள் செல்வதில் சிக்கல்
/
வழிமறிக்கும் செடி, கொடிகள் பாதசாரிகள் செல்வதில் சிக்கல்
வழிமறிக்கும் செடி, கொடிகள் பாதசாரிகள் செல்வதில் சிக்கல்
வழிமறிக்கும் செடி, கொடிகள் பாதசாரிகள் செல்வதில் சிக்கல்
ADDED : ஜன 11, 2025 11:15 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை, முத்தியால்பேட்டை சாலையோரம் ‛கான்கிரீட்' மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. கனரக வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள், விபத்தில் சிக்குவதை தவிர்க்க ‛கான்கிரீட்' மழைநீர் வடிகால்வாய் தளத்தை நடைபாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கால்வாயோரம் வளர்ந்துள்ள செடி, கொடிகள் நடைபாதை மறைத்து வளர்ந்துள்ளன. இதனால், பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, முத்தியால்பேட்டையில் நடைபாதையில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.