ADDED : ஆக 31, 2025 01:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:குரும்பிறை ஏரியில் வனத்துறை சார்பில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி நடந்தது.
சாலவாக்கம் ஊராட்சி, குரும்பிறை ஏரியில் உத்திரமேரூர் வனத்துறை சார்பில், பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி, உத்திரமேரூர் வனச்சரக அலுவலர் ராமதாஸ் தலைமையில் நேற்று நடந்தது.
சாலவாக்கம் ஊராட்சி தலைவர் சத்யா முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியா பங்கேற்று, பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியை துவக்கி வைத்தார்.
ஏரியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் முற்றிலும் அகற்றப்பட்டன. பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அபாயம் குறித்தும், கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

