/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பொய்கை ஆழ்வார் உற்சவம் துவக்கம்
/
பொய்கை ஆழ்வார் உற்சவம் துவக்கம்
ADDED : அக் 30, 2024 09:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பொய்கை ஆழ்வார் திருஅவதார உற்சவம் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் உற்சவம் நவ., 8ம் தேதி நிறைவு பெறுகிறது.
இதில், தினமும் காலை 9:00 மணிக்கு ஆழ்வார் திருமஞ்சனமும், 10:00 மணிக்கு சாற்றுமறையும், மாலை 5:00 மணிக்கு திருவீதி புறப்பாடும் நடைபெறுகிறது.
மாலை 6:30 மணிக்கு திவ்யபிரபந்த சாற்றுமறை நடைபெறுகிறது. நவ., 5ம் தேதி மணவாள மாமுனிகள் சாற்றுமறையும், நவ., 8 ம் தேதி பொய்கை ஆழ்வார் திருஅவதார உற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது.