/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உள்ளாவூரில் விளக்கின்றி மின்கம்பங்கள்
/
உள்ளாவூரில் விளக்கின்றி மின்கம்பங்கள்
ADDED : செப் 27, 2024 07:40 AM
வாலாஜாபாத்: வாலாஜாபாத்- - செங்கல்பட்டு சாலையில், பழையசீவரம் பிரதான சாலையில் இருந்து, உள்ளாவூர், லிங்காபுரம், தோண்டாங்குளம், தொள்ளாழி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது.
இச்சாலையை பயன்படுத்தி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலையில், பழையசீவரம் சின்ன காலனி முதல், உள்ளாவூர் வரையிலான 2 கி.மீ., துாரத்திற்கு மின் கம்பங்கள் இருந்தும் மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளது.
இதனால், இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இரவு நேரங்களில் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, இச்சாலையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.