/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் வேலுடன் குமரகோட்டம் கோவிலுக்கு செல்ல விஸ்வ ஹிந்து பரிஷத்துக்கு போலீசார் அனுமதி மறுப்பு

ADDED : அக் 28, 2025 11:38 PM
காஞ்சிபுரம்: விஸ்வ ஹிந்து பரிஷத், பா.ஜ., ஹிந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ்.,நிர்வாகிகளை, வேலுடன் காஞ்சிபுரம் குமரகோட்டம் கோவிலுக்குள் செல்ல போலீசார் மறுத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், காஞ்சிபுரம் நகரில் உள்ள பிள்ளையார்பாளையம் பகுதியில் இருந்து எஸ்.வி.என்.,பிள்ளைத்தெரு வழியாக, குமரகோட்டம் கோவில் வரை வேல் யாத்திரை செல்ல போலீசாரிடம் அனுமதி பெற்றிருந்தனர்.
அதன்படி, மாவட்ட தலைவர் சிவானந்தம் தலைமையில், நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு துவங்கிய யாத்திரையில், பா.ஜ.,மாவட்ட தலைவர் ஜெகதீசன், ஹிந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்.,நிர்வாகிகள் என ப லரும் பங்கேற்றனர்.
குமரகோட்டம் கோவில் அருகே சென்ற நிர்வாகிகள், வேலுடன் குமரகோட்டம் கோவிலுக்குள் செல்ல முயன்றபோது, போலீசார் தடுத்து நிறுத்தினர்.
வேலுடன் கோவிலுக்கு செல்லக்கூடாது என, போலீசார் தடுப்புகள் வைத்து நிறுத்தினர்.
'வேலுடன் கோவிலுக்கு செல்லக்கூடாது என அரசாணை ஏதும் உள்ளதா' என, பா.ஜ., மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் போலீசாரிடம் கேட்டு வாதம் செய்தனர். 'கோவிலுக்குள் வேலுடன் சென்று தரிசனம் செய்வது எங்களின் அடிப்படை உரிமை' என தெரிவித்தனர். இருப்பினும், போலீசார் அனுமதி மறுத்தனர்.
அரை மணி நேரத்திற்கு மேலாக இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் நடந்த நிலையில், கடைசியாக, கோவில் கோபுரம் வெளியே வேலுடன் கற்பூரம் ஏற்றி, நிர்வாகிகள் தரிசனம் செய்து புறப்பட்டனர்.