/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சோதனைச்சாவடியில் கண்காணிப்பு கேமரா பழுது குற்ற வாகனங்களை அறிவதில் சிரமத்தில் போலீசார்

ADDED : செப் 02, 2025 01:25 AM

உத்திரமேரூர், கட்டியாம்பந்தல் கூட்டுச்சாலையில் உள்ள சோதனைச்சாவடியில் கண்காணிப்பு கேமரா பழுதால், குற்ற வாகனங்களை அறிவதில் போலீசார் சிரமத்தில் உள்ளனர்.
உத்திரமேரூர் -- புக்கத்துறை நெடுஞ்சாலை, கட்டியாம்பந்தல் கூட்டுச்சாலை பகுதியில் வாகன சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடி, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை இணைக்கும் பகுதியில் உள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து, போளூர், வந்தவாசி, திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கு செல்ல இந்த சோதனைச்சாவடி பிரதான வழியாக உள்ளது.
இதனால், இவ்வழியே தினமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. அதில், கனிம வளங்கள் கடத்தல் மற்றும் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்லும் வாகனங்களை அடையாளம் காண, உத்திரமேரூர் போலீசார் கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணித்து வந்தனர்.
தற்போது, கண்காணிப்பு கேமரா முறையாக பராமரிப்பு இல்லாமல் கேபிள்கள் அறுந்து பழுதடைந்து உள்ளன. இதனால், குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் வாகனங்களை அடையாளம் காண முடியாமல் போலீசார் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, கட்டியாம்பந்தல் கூட்டுச்சாலையில் உள்ள சோதனைச்சாவடி கண்காணிப்பு கேமராவை சீரமைக்க, உத்திரமேரூர் போலீசாருக்கு, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.