/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விபத்தில் உருக்குலைந்த கார் அப்புறப்படுத்திய போலீசார்
/
விபத்தில் உருக்குலைந்த கார் அப்புறப்படுத்திய போலீசார்
விபத்தில் உருக்குலைந்த கார் அப்புறப்படுத்திய போலீசார்
விபத்தில் உருக்குலைந்த கார் அப்புறப்படுத்திய போலீசார்
ADDED : ஜன 19, 2025 03:05 AM
திருத்தணி, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார், ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த சுதாகர், 44, என்பவர், கடந்த, 6ம் தேதி, குடும்பத்துடன், 'வோக்ஸ்வேகன்' காரில், திருப்பதி கோவிலுக்கு சென்றார். அப்போது, திருத்தணி அரசு கல்லுாரி அருகே, கரும்பு டிராக்டர், கார் மீது மோதியதில், சுதாகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது மனைவி, மகள், மகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து திருத்தணி போலீசார் விபத்துக்குள்ளான காரை நெடுஞ்சாலையோரம் நிறுத்திவிட்டு சென்றனர்.
பத்து நாட்கள் ஆகியும், காரை போலீஸ் நிலையம் கொண்டு வரப்படாததால் மர்ம நபர்கள் கார் டயர், இன்ஜின், பேட்டரி உள்பட, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான காரின் உதிரி பாகங்களை திருடிச் சென்றனர்.
இது குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, திருத்தணி போலீசார் நேற்று காலை, காரை அங்கிருந்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து, பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர்.

