/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
போக்குவரத்தை சீரமைக்க போலீசார் ‛மிஸ்சிங்' ரயில்வே சாலையில் தொடர்கிறது நெரிசல்
/
போக்குவரத்தை சீரமைக்க போலீசார் ‛மிஸ்சிங்' ரயில்வே சாலையில் தொடர்கிறது நெரிசல்
போக்குவரத்தை சீரமைக்க போலீசார் ‛மிஸ்சிங்' ரயில்வே சாலையில் தொடர்கிறது நெரிசல்
போக்குவரத்தை சீரமைக்க போலீசார் ‛மிஸ்சிங்' ரயில்வே சாலையில் தொடர்கிறது நெரிசல்
ADDED : மே 02, 2025 01:01 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, எலைட் அயல்நாட்டு மதுபான கடை, மாவட்ட விளையாட்டு அரங்கம், தலைமை அஞ்சலகம், உழவர் சந்தை, சினிமா தியேட்டர், பெட்ரோல் பங்க், திருமண மண்டபம், பலசரக்கு மளிகை, ஜவுளிக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன.
வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், பி.எஸ்.கே., தெரு, திருசக்கரபுரம் தெரு இணையும் நான்கு முனை சந்திப்பில், போக்குவரத்தை சீரமைக்க போலீசார் இல்லாததால், இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கிறது.
விடுமுறை தினமான நேற்று மாலை,வழக்கத்தைவிட ரயில்வே சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது. இந்நிலையில், மாலை 6:50 மணிக்கு ரயில்வே சாலையுடன், பி.எஸ்.கே., தெரு, திருச்சக்கரபுரம் தெரு இணையும் நான்குமுனை சந்திப்பில் லேசான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசலை சீரமைக்க போலீசார் இல்லாததால், இடதுபக்கமாக செல்ல வேண்டிய இருசக்கர வாகன ஓட்டிகள், சாலை விதியை கடைபிடிக்காமல், வலது பக்கமாக சென்றதால், நான்கு முனை சந்திப்பில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நெரிசலில் சிக்கிய சைக்கிள், இருசக்கர வாகன ஓட்டிகள் ஊர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து தன்னார்வலர்கள் இருவர் போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால், அப்பகுதியில், 15 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து நெரிசல் சீரானது.
எனவே, ரயில்வே சாலையுடன், பி.எஸ்.கே., தெரு, திருச்சக்கரபுரம் தெரு இணையும் நான்கு முனை சந்திப்பில், காலை, மாலை அலுவலக நேரங்களிலும், விடுமுறை, பண்டிகை நாட்களிலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில், போதுமான போலீசாரை நியமிக்க, போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.