/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலையில் போலீசார் ரோந்து வர வலியுறுத்தல்

ADDED : நவ 10, 2025 11:21 PM
வாலாஜாபாத்: வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலையில், இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமென, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வாலாஜாபாதில் இருந்து கட்டவாக்கம், தென்னேரி, அயிமிச்சேரி, குண்ணம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக, சுங்குவார்சத்திரம் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.
இச்சாலையையொட்டி உள்ள சில பகுதிகளில், தனியார் தொழிற்சாலைகள் இயங்குகின்றன.
இத்தொழிற்சாலைகள் மற்றும் சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளில் இயங்கும் தொழிற்சாலைகளிலும், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இரவு, பகலாக 'ஷிப்ட்' முறையில் வேலை செய்து வருகின்றனர்.
இச்சாலை வழியாக இருசக்கர வாகனங்களில், இரவு நேரங்களில் சென்று வரும் தொழிலாளர்களுக்கு, சமூக விரோதி களின் அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆள் நடமாட்டம் இல்லாத சாலை பகுதிகளில், மர்ம நபர்கள் சுற்றி திரிவதால், இரவு நேரங்களில் பணி முடிந்து வீடு திரும்பும் போது அச்சம் உள்ளதாக தொழிலாளர்கள் பலரும் கூறி வருகின்றனர்.
எனவே, வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலையில், இரவு நேரங்களில் போக்குவரத்து ரோந்து வாகனத்தில் போலீசார் கண்காணிப்பில் அதிகம் ஈடுபட வேண்டுமென, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.