/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெசவாளர்கள் பகுதியிலேயே பட்டு சேலை கடைகள் துவக்கம் விற்பனை மையமாகும் பிள்ளையார்பாளையம்
/
நெசவாளர்கள் பகுதியிலேயே பட்டு சேலை கடைகள் துவக்கம் விற்பனை மையமாகும் பிள்ளையார்பாளையம்
நெசவாளர்கள் பகுதியிலேயே பட்டு சேலை கடைகள் துவக்கம் விற்பனை மையமாகும் பிள்ளையார்பாளையம்
நெசவாளர்கள் பகுதியிலேயே பட்டு சேலை கடைகள் துவக்கம் விற்பனை மையமாகும் பிள்ளையார்பாளையம்
ADDED : நவ 10, 2025 11:21 PM
காஞ்சிபுரம்: நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் காஞ்சிபுரம் நகரில் உள்ள பிள்ளையார்பாளையம் பகுதியில், அதிக பட்டு சேலை கடைகள் துவங்கப் படுவதால், அடுத்த விற்பனை மையமாக உருவாகும் என, நெசவாளர்கள், உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
சுப நிகழ்ச்சிகள், திருவிழா, பண்டிகை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு, காஞ்சிபுரம் பட்டு சேலை வாங்க, தமிழகத்தின் பிற பகுதிகள் மட்டுமல்லாமல், கர்நாடகா, ஆந்திரா என, பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் காஞ்சி புரம் வந்து செல்கின்றனர்.
தனியார் மற்றும் கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் என இரு தரப்பினரும், ஒவ்வொரு ஆண்டும் 300 கோடி ரூபாய்க்கு மேல், பட்டுச் சேலை விற்பனை செய்வதாக நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பல கோடி ரூபாய்க்கு நடக்கும் பட்டு சேலை வியாபாரம், 30 ஆண்டுகளுக்கு முன், காஞ்சிபுரம் நகரில் உள்ள மேட்டுத்தெருவில் பிரதானமாக நடந்தது.
மேட்டுத்தெருவில் உள்ள ஒவ்வொரு வீடும் பட்டு சேலை விற்பனை, உற்பத்தி செய்யும் இடமாக இருந்தது.
நாளடைவில், பட்டு சேலை அதிகளவில் விற்பனை செய்யும் இடமாக சங்கூசாபேட்டை மாறிவிட்டது.
சங்கூசாபேட்டை மற்றும் காந்திரோட்டில் உள்ள பிரதான கடைகளிலேயே, இப்போது அதிகளவில் பட்டுச் சேலை விற்பனை நடக்கிறது.
ஆனால், சமீப காலமாக பிள்ளையார்பாளையம் பகுதியில் பட்டுச் சேலை கடைகள் அதிகரித்து வருகின்றன. வீடுகளிலேயே பட்டு சேலை விற்பனை செய்வதால், வெளியூர் மக்கள் பிள்ளையார் பாளையத்திற்கு நேரடியாக வந்து, பட்டுச் சேலை வாங்க துவங்கி உள்ளனர்.
நெசவாளர்கள் அதிகளவில் உள்ள இப்பகுதியில், பட்டுச் சேலை உற்பத்தியையும் வாடிக்கையாளர்கள் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு தெருக்களிலும் பல கடைகள் இப்போது முளைத்துவிட்டன.
அதிக நெசவாளர்கள் கொண்ட இப்பகுதி, பட்டுச் சேலைக்கான விற்பனை மையமாக வளரும் என, உற்பத்தியாளர்கள் மற்றும் நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

