/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பொற்பந்தல் ஊராட்சி அலுவலக கட்டடப் பணி தீவிரம்
/
பொற்பந்தல் ஊராட்சி அலுவலக கட்டடப் பணி தீவிரம்
ADDED : செப் 20, 2024 12:43 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது பொற்பந்தல் ஊராட்சி. இப்பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டடத்தில் ஊராட்சி அலுவலகம் இயங்கி வந்தது.
இக்கட்டடம் மிகவும் பழுதடைந்து மழைக்காலத்தில் அலுவலகத்திற்குள் நீர் சொட்டும் நிலை ஏற்பட்டது. இதனால், சேதமான அக்கட்டடத்தை அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டடம் ஏற்படுத்த ஊராட்சி நிர்வாகம் சார்பில் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, பொற்பந்தலில் புதிதாக ஊராட்சி அலுவலகம் கட்ட 2023- - 24ம் ஆண்டுக்கான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
அதற்கான பணி சில மாதங்களுக்கு முன் துவங்கி தற்போது தீவிரமாக நடைபெறுகிறது.