/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பொங்கல் தின விளையாட்டு போட்டிகள்
/
பொங்கல் தின விளையாட்டு போட்டிகள்
ADDED : ஜன 16, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி அகரம் கிராமத்தில், பொங்கல் திருவிழா விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தன.
நேற்று, காலை சுழன்று பந்து அடித்தல், உறியடித்தல், சருக்குமரம் ஏறுதல், இசை நாற்காலி, கயறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடந்தன.
இந்த போட்டிகளில், கிராமப்புற சிறுவர்கள், சிறுமியர் மற்றும் பெரியவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பங்கேற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, ஊராட்சி தலைவர் சரிதா, துணைத்தலைவர் ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட நிர்வாகிகள் பரிசளித்தனர்.
பொங்கல் தினத்தில் சிறப்பாக கோலமிட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

