/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வல்லப்பாக்கம் கோவிலில் பொங்கல் விழா
/
வல்லப்பாக்கம் கோவிலில் பொங்கல் விழா
ADDED : பிப் 08, 2025 07:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சி, வல்லப்பாக்கத்தில் கிராமத்திற்கு சொந்மதான மந்தவெளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசம் விழா விமரிசையாக நடைபெறும். அதன்படி, 18ம் ஆண்டு தைப்பூச விழா வரும் 11ம் தேதி நடைபெறுகிறது.
விழாவையொட்டி, கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 11:00 மணிக்கு, வல்லப்பாக்கம் ஏரிக்கரையில் உள்ள நாக கன்னியம்மன் கோவிலில், அப்பகுதி பெண்கள் ஊரணி பொங்கலிட்டு அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். தொடர்ந்து, கரகம் அலங்காரத்தில் ஊர்வலமாக வந்த அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

