/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பொங்கல் பண்டிகை ‛'பர்ச்சேஸ்' காஞ்சியில் போக்குவரத்து நெரிசல்
/
பொங்கல் பண்டிகை ‛'பர்ச்சேஸ்' காஞ்சியில் போக்குவரத்து நெரிசல்
பொங்கல் பண்டிகை ‛'பர்ச்சேஸ்' காஞ்சியில் போக்குவரத்து நெரிசல்
பொங்கல் பண்டிகை ‛'பர்ச்சேஸ்' காஞ்சியில் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜன 15, 2024 04:07 AM

காஞ்சிபுரம் : பொங்கல் பண்டிகையை ஒட்டி, காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தினர் புத்தாடை எடுக்கவும், மளிகை பொருட்கள், பூஜைக்கு தேவையான பொருட்கள் வாங்க, நேற்று, காஞ்சிபுரத்தில் குவிந்தனர்.
பாதுகாப்பு பணி
இதனால், ஜவுளிக்கடை, காய்கறி, மளிகை பொருட்கள் அதிகம் நிறைந்த பலசரக்கு கடைகள், ரயில்வே சாலை, காந்தி சாலை, செங்கழுநீரோடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் காணப்பட்டது.
இச்சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். முக்கிய சந்திப்புகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விற்பனை விறுவிறு
பொங்கல் பண்டிகையொட்டி, நேற்று, உத்திரமேரூர் கடைதெருக்களில் கூட்டம் அலைமோதியது. உத்திரமேரூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆவாரம்பூ, பண்ணைப்பூ, வேப்பிலை, பூசணி, புதுப்பானை மற்றும் மஞ்சள் செடி, சங்கராந்தி, கரும்பு உள்ளிட்ட பொருட்களை சாலை ஓரத்தில் குவித்து வியாபாரிகள் விற்பனை செய்தனர்.
மேலும், நாளை, மாட்டுப்பொங்கல் கொண்டாட உள்ளதையடுத்து, மாட்டு கொம்புகளில் தீட்ட வர்ணம், புதிய கயிறுகள், மணிகள், சலங்கைகள் உள்ளிட்ட பொருட்களும் விறுவிறுப்பாக விற்பனையானது.
தேங்காய், பழங்கள், பூக்கள், வெற்றிலை, பாக்கு போன்ற பூஜைக்கு தேவையான பொருட்களின் விலை உயர்ந்து உள்ளதாகவும், எனினும் பொங்கல் கொண்டாடுவதற்காக செலவு குறித்து தயங்காமல் வாங்கி செல்வதாக பொதுமக்கள் கூறினர்.