/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பொங்கல் விளையாட்டு போட்டி கிராமங்களில் கோலாகலம்
/
பொங்கல் விளையாட்டு போட்டி கிராமங்களில் கோலாகலம்
ADDED : ஜன 17, 2024 10:25 PM

உத்திரமேரூர்:பொங்கல் பண்டிகையையொட்டி, உத்திரமேரூர் சுற்றுவட்டார கிராமங்களில் விளையாட்டு போட்டிகள் மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்தன.
கரும்பாக்கம் கிராமத்தில், உறி அடித்தல், கயிறு இழுத்தல், சறுக்கு மரம் ஏறுதல் மற்றும் பெண்களுக்கான கோலப்போட்டி, இளைஞர்களுக்கான கபடி உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதேபோன்று, பழவேரி பழங்குடியினர் பகுதியில், கலாம் மக்கள் இயக்கம் சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடந்தன.
சிறுவர்களுக்கான ஓட்ட பந்தயம், சாக்கு போட்டி, இளம் பெண்களுக்கான மியூசிக் சேர், பலுான் ஊதும் போட்டி போன்றவை நடைபெற்றது.
இதேபோன்று, சித்தாவரம் கிராமத்தில் நேற்று முன்தினம் திருவள்ளுவர் தினத்தையொட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், பாட்டு போட்டி, சிலம்பாட்டம் மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.