/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பொன்னேரிக்கரை பாலத்தில் பழுதான மின்விளக்கால் அவதி
/
பொன்னேரிக்கரை பாலத்தில் பழுதான மின்விளக்கால் அவதி
ADDED : செப் 20, 2024 12:36 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்திலிருந்து பொன்னேரிக்கரை வழியே சென்னை செல்லும் பிரதான சாலையில், தினமும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
சாலையின் குறுக்கே செங்கல்பட்டு - -அரக்கோணம் ரயில் பாதை அமைந்துள்ளது. இங்குள்ள புதிய ரயில் நிலைய கடவுப்பாதையில், ரயில்கள் வரும் நேரத்தில், மணிக்கணக்கில் வாகனங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
இதனால், 5 ஆண்டுகளுக்கு முன்பாக, 50 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. உயர்மட்ட பாலத்தில் அமைக்கப்பட்ட மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை.
இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மேலும், வழிப்பறி சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது.
இந்த மின்விளக்குகளை கோனேரிக்குப்பம் ஊராட்சி நிர்வாகம் பராமரிக்கிறது. அடிக்கடி பழுதாலும் பாலத்தின் மின்விளக்குகளை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.