/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பொன்னேரிக்கரை காவல் நிலையம் திறந்து 40 வழக்குகள் பதிவு
/
பொன்னேரிக்கரை காவல் நிலையம் திறந்து 40 வழக்குகள் பதிவு
பொன்னேரிக்கரை காவல் நிலையம் திறந்து 40 வழக்குகள் பதிவு
பொன்னேரிக்கரை காவல் நிலையம் திறந்து 40 வழக்குகள் பதிவு
ADDED : செப் 24, 2024 03:49 AM
காஞ்சிபுரம் : காஞ்சி தாலுகா காவல் நிலையம், சின்ன காஞ்சிபுரம், திருவீதிபள்ளத்தில் இயங்கி வருகிறது. தாலுகா காவல் எல்லையில், 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருந்ததால், புகார் அளிக்கவும், விசாரணைக்கு ஆஜராகவும், 15 கி.மீ., துாரத்துக்கும் மேலாக கிராம மக்கள்பயணிக்க வேண்டிய சூழல் இருந்தது.
இதனால், பொன்னேரிக்கரையில் புதிதாக காவல் நிலையம் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. அதன்படி, புதிய காவல் நிலையம் திறக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் கடந்தாண்டு அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி, பொன்னேரிக்கரை அண்ணா பல்கலை கல்லுாரியின் வளாகத்தில், பொன்னேரிக்கரை காவல் நிலையம், போலீஸ் எஸ்.பி., சண்முகம் தலைமையில் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி, திறக்கப்பட்டது.
இந்த காவல் நிலையத்தின் ஆய்வாளராக நிவாசன் நியமிக்கப்பட்டிருந்தார். இரண்டு உதவி ஆய்வாளர்கள், 27போலீசார் பணி அமர்த்தப்பட்டனர்.
புதிய காவல் நிலையம் திறக்கப்பட்ட பின், தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து, கிராமங்களில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், விபத்து, குடும்ப பிரச்னை, அடிதடி வழக்கு என, 40 குற்ற வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.