/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பராமரிப்பில்லாத வடிகால்வாயால் புத்தகரத்தில் சுகாதார சீர்கேடு
/
பராமரிப்பில்லாத வடிகால்வாயால் புத்தகரத்தில் சுகாதார சீர்கேடு
பராமரிப்பில்லாத வடிகால்வாயால் புத்தகரத்தில் சுகாதார சீர்கேடு
பராமரிப்பில்லாத வடிகால்வாயால் புத்தகரத்தில் சுகாதார சீர்கேடு
ADDED : அக் 21, 2025 11:42 PM

வாலாஜாபாத்: புத்தகரத்தில், மழைநீர் வடிகால்வாய் முறையான பராமரிப்பு இல்லாததால் கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட புத்தகரம் கிராமத்தில், பெருமாள் கோவில் தெருவின் இருபுறமும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கால்வாயில், தங்கள் வீடுகளின் கழிவுநீரை அப்பகுதி மக்கள் வெளியேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கால்வாய் போதுமான பராமரிப்பின்மையால், ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி உள்ளது.
இதனால், மழை நேரங்களில் கால்வாய் நிரம்பி கழிவுநீர் வீட்டு வாசல் மற்றும் குடியிருப்புகளில் புகுந்து விடும் நிலை ஏற்படுகிறது.
மேலும், கொசு உற்பத்தி அதிகரிப்பு, துர்நாற்றம் உள்ளிட்ட சுகாதார சீர்கேடு உள்ள தால் தொற்று நோய் அச்சம் நிலவுகிறது.
எனவே, புத்தகரம் பெருமாள் கோவில் தெருவில், மழைநீர் கால்வாய் அடைப்புகளை சரி செய்து கழிவுநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.