/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மூன்று மாதங்களாக மூடியுள்ள ஏ.டி.எம்., அஞ்சலக வாடிக்கையாளர்கள் அவதி
/
மூன்று மாதங்களாக மூடியுள்ள ஏ.டி.எம்., அஞ்சலக வாடிக்கையாளர்கள் அவதி
மூன்று மாதங்களாக மூடியுள்ள ஏ.டி.எம்., அஞ்சலக வாடிக்கையாளர்கள் அவதி
மூன்று மாதங்களாக மூடியுள்ள ஏ.டி.எம்., அஞ்சலக வாடிக்கையாளர்கள் அவதி
ADDED : மே 24, 2025 01:47 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தின் நுழைவாயிலில், உள்ள ஏ.டி.எம்., மையம், கடந்த மூன்று மாதங்களாக மூடி உள்ளது.
இதனால், அஞ்சலக வாடிக்கையாளர்கள் பிற வங்கி ஏ.டி.எம்., மையத்தை நாட வேண்டிய நிலை உள்ளது. மாற்று வங்கி ஏ.டி.எம்.,மில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது.
எனவே, காஞ்சிபுரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் மூடி கிடக்கும் ஏ.டி.எம்., மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வாடிக்கை யாளர்களிடம் எழுந்துஉள்ளது.
இதுகுறித்து காஞ்சிபுரம்தலைமை அஞ்சலக அலுவலர் ஒருவர் கூறியதாவது:
நாடு முழுதும் உள்ள இந்தியா போஸ்ட்ஏ.டி.எம்., மையத்தில் பணத்தை நிரப்பும் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்து விட்டது.
புதிய நிறுவனத்திடம் ஒப்பந்த பேச்சு நடந்துவருகிறது. விரைவில் ஏ.டி.எம்., மையம் வழக்கம்போல இயங்கும்.
இவ்வாறு அவர்கூறினார்.