/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஸ்ரீபெரும்புதுாரில் விதிமீறி பத்திரப்பதிவு 'யார் அந்த சார் - பதிவாளர்' என போஸ்டர்
/
ஸ்ரீபெரும்புதுாரில் விதிமீறி பத்திரப்பதிவு 'யார் அந்த சார் - பதிவாளர்' என போஸ்டர்
ஸ்ரீபெரும்புதுாரில் விதிமீறி பத்திரப்பதிவு 'யார் அந்த சார் - பதிவாளர்' என போஸ்டர்
ஸ்ரீபெரும்புதுாரில் விதிமீறி பத்திரப்பதிவு 'யார் அந்த சார் - பதிவாளர்' என போஸ்டர்
ADDED : ஜன 27, 2025 11:46 PM

ஸ்ரீபெரும்புதுார்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அருகே ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம், வல்லம் வடகால், பிள்ளைப்பாக்கம், இருங்காட்டுக்கோட்டை ஆகிய ஐந்து சிப்காட் தொழில் பூங்காவில், 1,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
மேலும், மருத்துவ சாதனங்கள் பூங்கா, வானுார்தி பூங்கா போன்றவையும், ஒரகடத்தில் சமீபத்தில் அமைந்துள்ளது. இதனால், ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் வீட்டு மனைகள் பல மடங்கு அதிகரித்து வருகிறது.
இதற்கான பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு தேவைக்காக, ஸ்ரீபெரும்புதுர் சார் -- பதிவாளர் அலுவலகத்திற்கு, தினமும் 500க்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.
இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் அலுவலகத்தில், நிரந்தர சார் - பதிவாளர் இல்லாததால், உதவியாளர்கள் பொறுப்பு சார் -- பதிவாளராக ஆவணங்களை பதிவு செய்து வருகிறார்.
இதனால், சார் -- பதிவாளர் அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பகுதிவாசிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
சொத்தில் உரிமை மற்றும் தொடர்பு இல்லாத நபர்களிடம் லஞ்சம் வாங்கி கொண்டு, பல்வேறு சொத்துக்களை பதிவு செய்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், 'சட்டத்தை மீறி பத்திரப்பதிவு செய்யும் யார் அந்த சார் - பதிவாளர்' என, வாசகங்கள் அடங்கிய போஸ்டர், ஸ்ரீபெரும்புதுார் முழுதும் ஒட்டப்பட்டுள்ளது. இது, மக்களுக்கிடையே பல சந்தேகங்களையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

