/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஜல்லி கற்கள் பெயர்ந்த எழிச்சூர் சாலையில் பள்ளங்கள்
/
ஜல்லி கற்கள் பெயர்ந்த எழிச்சூர் சாலையில் பள்ளங்கள்
ஜல்லி கற்கள் பெயர்ந்த எழிச்சூர் சாலையில் பள்ளங்கள்
ஜல்லி கற்கள் பெயர்ந்த எழிச்சூர் சாலையில் பள்ளங்கள்
ADDED : நவ 30, 2024 12:34 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அடுத்த, பண்ருட்டி கண்டிகையில் இருந்து பிரிந்து, பனையூர், எழிச்சூர் வழியாக பாலுார் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியே, எழிச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கர்ப்பிணியர், நோயாளிகள் நாள்தோறும் சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக சென்று வருகின்றனர்.
கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால், பண்ருட்டி கண்டிகை சந்திப்பில் சாலை ஆங்காங்கே சேதமடைந்து பள்ளங்களாக மாறியுள்ளது. இதனால், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் கர்ப்பிணியர் அவதிபட்டு வருகின்றனர்.
மேலும், இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், எதிர்பாராத பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
தற்போது, பரவலாக பெய்து வரும் மழையால், சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி, அதில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் நிலைத்தடுமாறி விழுந்து, உயிர் பலி ஏற்படும் நிலை அதிகரித்துள்ளது.
எனவே, சாலையில் ஆங்கங்கே ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.