/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சவுடு மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் மண்பாண்ட தொழிலாளர்கள் வலியுறுத்தல்
/
சவுடு மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் மண்பாண்ட தொழிலாளர்கள் வலியுறுத்தல்
சவுடு மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் மண்பாண்ட தொழிலாளர்கள் வலியுறுத்தல்
சவுடு மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் மண்பாண்ட தொழிலாளர்கள் வலியுறுத்தல்
ADDED : நவ 25, 2025 04:14 AM

காஞ்சிபுரம்: மண்பாண்ட தொழிலுக்கு தேவையான சவுடு மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என, மண்பாண்ட தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கார்த்திகை தீபத் திருவிழா டிச., 3ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவையொட்டி, வீடு, கடை, அலுவலகம், தொழிற் கூடம், கோவில் உள்ளிட்ட இடங்களில் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கமாக உள்ளது.
இவ்விழாவை ஒட்டி, காஞ்சிபுரம் திருக்காலிமேடில், 10க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள், அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்த மண்பாண்டம் தயாரிக்கும் மூத்த கலைஞர் பி.சிவலிங்க உடையார் கூறியதாவது:
கடந்த 50 ஆண்டுகளாக மண்பாண்ட தொழில் செய்து வருகிறேன். கார்த்திகை தீபத்தையொட்டி, அகல்விளக்கு தயாரிப்பு பணியை நேற்று துவங்கினேன்.
காலை 8:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை பணி செய்து, ஒரு நாளைக்கு 2,000 அகல் விளக்குகள் தயார் செய்கிறேன்.
மொத்த விலையில், 1,000 அகல் விளக்கு, 1,200 ரூபாய்க்கும், சில்லரை விலையில் ஒரு விளக்கு 2 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீர்நிலைகளில் களிமண் எடுக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.
அதேபோல, மண்பாண்ட தொழிலுக்கு தேவையான சவுடுமண் எடுக்கவும் அரசு அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

