ADDED : ஆக 11, 2025 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் உள்ள புத்தர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.
காஞ்சிபுரம் - வையாவூர் சாலை, கோனேரிகுப்பம் ஊராட்சி, காமாட்சியம்மன் நகரில், போதி தர்மர் புத்த விஹார் எனப்படும் புத்தர் கோவில் உள்ளது.
இங்கு நேற்று பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. உபாசகர்கள் குடும்பத்துடன் பங்கேற்று, பகவான் புத்தர் தாதுக்கள் வைக்கப்பட்ட ஸ்துாபியில் விளக்கேற்றி தியானம் செய்தனர்.
பகவான் புத்தர் சிலை முன் அமர்ந்து பாலி மொழியில் புத்த பூஜையும், அரச மரத்தை சுற்றி விளக்கேற்றினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை காஞ்சி புத்தர் கோவில் தலைவர் திருநாவுக்கரசு செய்திருந்தார்.