/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கார் மோதி உடைந்த மின்கம்பம் மின்சாரம் துண்டிப்பால் அவதி
/
கார் மோதி உடைந்த மின்கம்பம் மின்சாரம் துண்டிப்பால் அவதி
கார் மோதி உடைந்த மின்கம்பம் மின்சாரம் துண்டிப்பால் அவதி
கார் மோதி உடைந்த மின்கம்பம் மின்சாரம் துண்டிப்பால் அவதி
ADDED : நவ 16, 2024 12:54 AM

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. நேற்று காலை ஒரகடத்தில் இருந்து வண்டலுார் நோக்கி சென்ற கார், செரப்பனஞ்சேரி, அண்ணா தெரு அருகே திரும்பிய போது, சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது.
இதில், மின்கம்பம் உடைந்து சாலையோரம் சாய்ந்தது. காரின் முன்பகுதி சேதமடைந்தது. இதையடுத்து, கார் ஓட்டுனர் அங்கிருந்து காருடன் தப்பினார். இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அதன்பின், மின்வாரிய ஊழியர்கள் சேதமான மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பத்தை அமைத்தனர். இதனால், அண்ணா தெரு, மேட்டுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில், காலை 7 மணி முதல் மாலை வரை ஏற்பட்ட மின்தடையால், அப்பகுதியினர் கடும் அவதியடைந்தனர்.