/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கு பயிற்சி
/
மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கு பயிற்சி
மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கு பயிற்சி
மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கு பயிற்சி
ADDED : மார் 19, 2025 06:12 PM
காஞ்சிபுரம்:'தாட்கோ' எனப்படும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
அதன் அடிப்படையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சிக்கு பி.எஸ்சி., அல்லது எம்.எஸ்சி., நர்சிங் பட்டப் படிப்பு, போஸ்ட் பேசிக் பி.எஸ்சி., நர்சிங் மற்றும் பொது செவிலியர் மருத்துவப் படிப்பு ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்பயிற்சியில் பங்கு பெற 21 - 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியானவர்களுக்கு, பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் வாயிலாக வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
இப்பயிற்சியில் சேர்வதற்கு, தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.