/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சார் - பதிவாளர் அலுவலகங்களில் தொடரும் இடைத்தரகர் ஆதிக்கம்
/
சார் - பதிவாளர் அலுவலகங்களில் தொடரும் இடைத்தரகர் ஆதிக்கம்
சார் - பதிவாளர் அலுவலகங்களில் தொடரும் இடைத்தரகர் ஆதிக்கம்
சார் - பதிவாளர் அலுவலகங்களில் தொடரும் இடைத்தரகர் ஆதிக்கம்
ADDED : நவ 03, 2024 01:36 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் இணை சார் -- பதிவாளர் அலுவலகங்கள், காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு, தினமும் ஏராளமானோர் வில்லங்க சான்றிதழ், திருமண பதிவு சான்றிதழ் உள்ளிட்ட சான்றுகள் பெற வருகின்றனர்.
மேலும், பத்திரப்பதிவு, தானம், பாகப்பிரிவினை, உயில், பொது அதிகார பத்திரம், அடமானம் போன்றவற்றை பதிவு செய்வதற்கும் வருகின்றனர்.
பொதுமக்கள் நேரடியாக சென்று பதிவு செய்வதை காட்டிலும், இடைத்தரகர் மூலம் சென்றால்தான் வேலைகள் விரைவாக முடிவதாக புகார் தெரிவிக்கின்றனர். சான்றுகள் கோரி முறையாக அலுவலகத்தில் மனு அளித்தாலும், முறையாக பதில் அளிப்பதில்லை.
ஒரே கட்டடத்தில் இரண்டு சார் - பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களில் இடைத்தரகர்கள் மூலம் கணிசமான தொகை கொடுத்தால் மட்டுமே வேகமாக வேலை நடப்பதாக தெரிவிக்கின்றனர்.
பத்திரப்பதிவு துறையில் பெரும்பாலான சேவைகள் ஆன்லைனில் கொண்டு வந்தாலும், இடைத்தரகர்கள் மூலமாக சென்றால் மட்டுமே பணிகள் விரைந்து நடக்கின்றன.
எனவே, பொதுமக்கள் நலன் கருதி, சார் - -பதிவாளர் அலுவலகத்தில் நடமாடும் இடைத்தரகர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.