/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பிரதமர் வேலை வாய்ப்பு திட்டம் இலக்கை தாண்டி கடன் வழங்கல்
/
பிரதமர் வேலை வாய்ப்பு திட்டம் இலக்கை தாண்டி கடன் வழங்கல்
பிரதமர் வேலை வாய்ப்பு திட்டம் இலக்கை தாண்டி கடன் வழங்கல்
பிரதமர் வேலை வாய்ப்பு திட்டம் இலக்கை தாண்டி கடன் வழங்கல்
ADDED : ஜன 30, 2025 11:53 PM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 706 நபர்களுக்கு, 12.37 கோடி ரூபாய் வழங்கி புதிய வேலை உருவாக்கப்பட்டு உள்ளது. இது, தொழில் மையத்திற்கு வழங்கிய இலக்கை தாண்டியும், கூடுதல் எண்ணிக்கை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட தொழில் மையம் இயங்கி வருகிறது. இங்கு, மத்திய அரசின் பிரதமர் வேலை வாய்ப்பு திட்டம், 2008ல் துவக்கப்பட்டது.
புதிதாக துவங்கும் குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ப, வங்கி கடன், மின் வாரிய கட்டண சலுகை, உள்ளாட்சிகளில் அனுமதி என, பல்வேறு சலுகைகளை அரசிடம் இருந்து, மாவட்ட தொழில் மையம் பெற்று தருகிறது.
உற்பத்தி பிரிவுக்கு, 50 லட்சமும், சேவை மற்றும் வணிகப் பிரிவுக்கு, 20 லட்சமும், குறைந்தபட்ச கல்வி பிரிவுக்கு உற்பத்தி பிரிவில் 10 லட்சமும், சேவை மற்றும் வணிகப் பிரிவுக்கு, 5 லட்சம் என, கடனுதவி வழங்கி, வேலை வாய்ப்பு ஏற்படுத்துகிறது.
நகர்ப்புற பொதுப்பிரிவினருக்கு, 15 சதவீதமும், ஊரக பொதுப்பிரிவினருக்கு, 25 சதவீதமும், நகர்ப்புற சிறப்பு பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள், மாற்றுப் பாலினத்தவர்கள், 25 சதவீதமும், ஊரக சிறப்பு பிரிவினருக்கு, 35 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் வாயிலாக, நான்கு நிதியாண்டுகளில், 285 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில், இலக்கு நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் முடிய 706 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக, கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, 12.37 கோடி ரூபாய் மானிய நிதி வழங்கப்பட்டு உள்ளது.
பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில், நிர்ணயம் செய்த இலக்கை காட்டிலும், கூடுதலாக நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல், நிதியும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட தொழில் மைய அதிகாரி,
காஞ்சிபுரம்.

