/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தொழில் மையத்தில் கடன் பெற தகுதி மதிப்பெண் குறைவால் சிக்கல்! அரசின் இலக்கு எட்டாக்கனியாகும் அவலம்
/
தொழில் மையத்தில் கடன் பெற தகுதி மதிப்பெண் குறைவால் சிக்கல்! அரசின் இலக்கு எட்டாக்கனியாகும் அவலம்
தொழில் மையத்தில் கடன் பெற தகுதி மதிப்பெண் குறைவால் சிக்கல்! அரசின் இலக்கு எட்டாக்கனியாகும் அவலம்
தொழில் மையத்தில் கடன் பெற தகுதி மதிப்பெண் குறைவால் சிக்கல்! அரசின் இலக்கு எட்டாக்கனியாகும் அவலம்
ADDED : அக் 22, 2024 07:37 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட தொழில் மையம் இயங்கி வருகிறது. இங்கு, மத்திய அரசின் உதயம் இணையத்தளத்தில, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துவங்குவதற்கு, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
புதிதாக துவங்கும் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ப, வங்கி கடன், மின் வாரிய கட்டண சலுகை, உள்ளாட்சிகளில் அனுமதி என பல்வேறு சலுகைகளை அரசிடம் இருந்து, மாவட்ட தொழில் மையம் பெற்று தருகிறது.
எலக்ட்ரானிக் பொருட்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரையில், வேளாண் பொருட்கள் உற்பத்தி, கனிமம், குவாரி, உணவு பொருட்கள் தயாரித்தல், ஆயத்த ஆடைகள் உற்பத்தி, ரசாயனம், மரப்பொருட்கள் தயாரித்தல், ரப்பர் பொருட்கள் தயாரித்தல் போன்றவை அதிக நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன.
அதிக அளவில், ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளும், ரசாயனம், கண்ணாடி, மருந்து, எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் பகுதிகளில் செயல்பட்டாலும், பலரும் சொந்தமாக நிறுவனம் ஒன்றை அமைத்து, அதன்மூலம் பலருக்கு வேலை அளிக்கும் சிறு, குறு நிறுவனங்கள் நடத்த துவங்கிவிட்டனர்.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2021- - 22ம் ஆண்டில், 17,379 நிறுவனங்கள். 2022 - -23ல், 19,892 நிறுவனங்கள். 2023- - 24ல், கடந்த மார்ச் வரை, 24,788 நிறுவனங்கள் பதிவு செய்து உள்ளன.
இதுதவிர, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை, 2023- - 24ம் ஆண்டு தமிழக அரசு துவக்கி உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், 1ம் தேதிக்கு மேல் தொழில் துவங்கிய பட்டியல் இனத்தைச் சேர்ந்த நிறுவனதாரரர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதில், 18 - 55 வயது வரையில் இருக்கும், தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருவாய், திட்ட மதிப்பீடு ஆகியவை தேவை இல்லை.
தனி நபர் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழு கடன், சேமிப்பு கிடங்கு, தங்கும் விடுதி, எரிவாயு நிலையங்கள் உள்ளிட்டவை விண்ணப்பிக்கலாம்.
மானியம்
ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும், 100 சதவீத கடனில், 35 சதவீதம் கடன் அரசு மானியமாகவும், 65 சதவீதம் வங்கி கடனாக வழங்கும்.
தொழில் துவங்க வாங்கிய கடனை 10 ஆண்டுக்கு மிகையாமல் திரும்ப செலுத்த வேண்டும். இதற்கு, கலெக்டர் தலைமையில் திட்டக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில், 2023 - -24ம் நிதி ஆண்டிற்கு, 69 பேருக்கு, 31.82 கோடி ரூபாய் வங்கி கடன் மற்றும் 9.85 கோடி ரூபாய் மானியம் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதில், 48 பேருக்கு, 26.56 கோடி ரூபாய் கடனும், 7.98 கோடி ரூபாய் மானியமும் வழங்கப்பட்டு உள்ளன.
நடப்பு நிதி ஆண்டிற்கு, 43 பேருக்கு 15.83 கோடி ரூபாய் கடன், 5.17 கோடி ரூபாய் மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதில், 18 பேருக்கு, 4.97 கோடி ரூபாய் கடன், 95 லட்ச ரூபாய் மானியம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
ஆறு மாதங்களாக மாவட்ட தொழில் மையத்தில், தொழில் துவங்க கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு, கடன் மற்றும் அதற்குரிய மானியமும் வரவில்லை என, விண்ணப்பதாரர்கள் இடையே புலம்பல் ஏற்படுத்தி உள்ளது.
இதனால், படித்த இளைஞர்கள் தொழில் துவங்குவதில் சிக்கல் ஏற்படுத்தி உள்ளது என, புலம்பல் ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆண்டுதோறும், மாவட்ட தொழில் மையத்தில், தொழில் கடன் வழங்குவதற்கு, அரசு இலக்கு நிர்ணயம் செய்து கடனுதவி வழங்குகிறது.
சிபில் ஸ்கோர்
மாவட்ட தொழில் மையத்தில் இருந்து, வங்கி கடன் பெற பரிந்துரைக்கும் போது, அவர் மீது சிபில் ஸ்கோர் என, அழைக்கப்படும் கடன் பெற தகுதி மதிப்பெண் குறைவாக இருக்கும். இதனால், கடன் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது.
குறைந்த கடனுக்கு ஏற்ப, தொழில் திட்ட அறிக்கை மாற்றி தருவதற்குள் கால தாமதம் ஏற்படுகிறது. வேறு எந்த ஒரு நோக்கமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.