/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
31 ஊராட்சிகளில் வளர்ச்சி பணி செய்வதில்...சிக்கல்!: ரூ.23.58 கோடி நிதி மாற்றுவதில் சுணக்கம்
/
31 ஊராட்சிகளில் வளர்ச்சி பணி செய்வதில்...சிக்கல்!: ரூ.23.58 கோடி நிதி மாற்றுவதில் சுணக்கம்
31 ஊராட்சிகளில் வளர்ச்சி பணி செய்வதில்...சிக்கல்!: ரூ.23.58 கோடி நிதி மாற்றுவதில் சுணக்கம்
31 ஊராட்சிகளில் வளர்ச்சி பணி செய்வதில்...சிக்கல்!: ரூ.23.58 கோடி நிதி மாற்றுவதில் சுணக்கம்
ADDED : நவ 23, 2024 08:04 PM
காஞ்சிபுரம்:ஸ்ரீபெரும்புதுாரில், 31 ஊராட்சிகளுக்கு கிடைக்க வேண்டிய, 23.58 கோடி ரூபாய் நிதி மாற்றம் செய்வதில், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் சுணக்கம் காட்டி வருகின்றனர். இதனால், ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இதில், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், வாலாஜாபாத் ஆகிய ஒன்றியங்களில், அதிக தொழிற்சாலைகள் நிறைந்த ஊராட்சிகளாக உள்ளன.
இந்த தொழிற்சாலைகளுக்கு, உரிம கட்டணம், ஆய்வுக் கட்டணம், இயந்திரங்கள் பயன்படுத்துவதற்கு புதுப்பிக்கும் கட்டணம் ஆகிய கட்டணங்கள் செலுத்த வேண்டும். இதில் கிடைக்கும் கோடிக்கணக்கான வருவாயில், ஊராட்சிகளின் வளர்ச்சிகளுக்கு, 90 சதவீதமும், 10 சதவீதம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சேவை வரியாக செலுத்த வேண்டும்.
தொழிற்சாலைகள் செலுத்தும் வரியினங்களில், ஊராட்சிகளின் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தலாம். அதேபோல, ஒன்றியத்திற்கு பிரித்து அளிக்கப்படும் பணத்தையும் ஒன்றிய பொது நிதி வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தலாம்.
கடந்த 2017- - 18ம் ஆண்டு முதல், 2024ம் ஆண்டு வரையில், 26.31 உரிம கட்டணம் மற்றும் ஆய்வுக் கட்டணம் ஆகியவை தனி கணக்கு துவக்கி, வரவு வைத்து செலவிட்டு வந்துள்ளனர்.
கடந்த, 2017- - 18ம் ஆண்டு முதல், 2024ம் ஆண்டு வரை, 26.31 கோடி ரூபாய் உரிம கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் தனி வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது. அந்த பணம் செலவிடப்படாமல் உள்ளது என, தணிக்கை குழுவில் அம்பலமாகி உள்ளது.
இந்த பிரச்னை பெரிதாகிவிடப் போகிறது என, வட்டார வளர்ச்சி நிர்வாகம், தனி வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை அந்தந்த ஊராட்சி நிர்வாகங்களின் பொது கணக்கிற்கு மாற்றம் செய்ய வேண்டும். அகையால், பணத்தை ஒன்றிய பொது நிதி கணக்கிற்கு மாற்றம் செய்து கொடுக்க வேண்டும் என, கடிதம் வழங்கி உள்ளார்.
தனி கணக்கில் இருந்து, 23.58 கோடி ரூபாய் பொது நிதிக்கு மாற்றம் செய்தால், அந்த நிதியை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகங்களுக்கு மாற்றுவது சவுகரியமாக இருக்கும் என, வட்டார வளர்ச்சி அலுவலர் தனி தபால் வழங்கி உள்ளார்.
இந்த நிதி மாற்றும் பணியில், சில அதிகாரிகளின் மொத்தனப் போக்கால், நிதி மாற்றும் பணி சுணக்கம் ஏற்பட்டு உள்ளது என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், 31 ஊராட்சிகளுக்கு கிடைக்க வேண்டிய நிதி ஒதுக்கீடு கிடைப்பதில், சிக்கல் நீடித்து வருகிறது. இதை சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சி துறையினர் ஆய்வு செய்து, ஊராட்சிகளுக்கு கிடைக்க வேண்டிய நிதியை, பகிர்ந்தளிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நிதி மாற்றம் செய்யும் பணியை, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் வாயிலாக, கணக்கீடும் பணி நடந்து வருகின்றன. விரைவில், தொழில் உரிமம் நிதியை ஊராட்சிகளுக்கு நிதி விடுவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தின் தனி கணக்கில் பல கோடி ரூபாய் இருப்பு இருப்பதால், ஒன்றியக் குழு கவுன்சிலர்களின் ஒப்புதலுடன் டெண்டர் வைக்கலாம் என, சேர்மன் பேசும் போது தான் உண்மை நிலவரம் தெரிய வருகிறது. இது, ஊராட்சிகளின் பொது நிதிக்கு சென்று சேர வேண்டியது என, தெரிய வருகிறது. அதன்படி, 23.58 கோடி ரூபாய் ஊராட்சிகளின் பொது நிதிக்கு சென்றால், பல்வேறு வளர்ச்சி பணிகள் பூர்த்தியாகும் என, பேசப்படுகிறது.