/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வளர்ந்த புற்களால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
/
வளர்ந்த புற்களால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
ADDED : ஆக 04, 2025 01:11 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நத்தப்பேட்டை வடிகால்வாயில் கோரைப்புற்கள் வளர்ந்துள்ளதால், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நத்தப்பேட்டையில் குடியிருப்பு வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வடிகால்வாயை முறையாக பராமரிக்காததால், முத்தாலம்மன் கோவில் குளக்கரை வழியாக செல்லும் கால்வாயின் நீர்வழித்தட பாதையில் செடிகள், கோரைபுற்கள் வளர்ந்துள்ளன. அங்கே கால்வாய் இருப்பதற்கான அடையாளமே தெரியாமல் உள்ளது.
இதனால், கால்வாய் வாயிலாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு, அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது.
எனவே, நத்தப்பேட்டையில் உள்ள மழைநீர் வடிகால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.