/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
யாக சாலை கலச புனிதநீர் காஞ்சியில் ஊர்வலம்
/
யாக சாலை கலச புனிதநீர் காஞ்சியில் ஊர்வலம்
ADDED : ஜன 29, 2024 04:35 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கும்பாபிஷேகம் பிப்.,1ல் நடக்கிறது. இதையொட்டி யாகசாலை கலசங்களில் சேர்ப்பதற்கான புனிதநீர் காசி, திரிவேணி சங்கமம், தலைக்காவேரி, ராமேஸ்வரம் ஆகிய புனித தலங்களிலிருந்து சேகரிக்கப்பட்டு, காஞ்சிபுரம் கொண்டு வரப்பட்டது.
காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோவிலில் புனிதநீர் பூஜிக்கப்பட்டு, காலை 8:00 மணிக்கு முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கச்சபேஸ்வரர் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் வைக்கப்பட்டது.
மாலை 6:00 மணிக்கு குரு கோவிலில் இருந்து, புற்றுமண் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், கோவில் சிவாச்சாரியார்கள், காஞ்சிபுரம் நகர செங்குந்த மகாஜன சங்க கட்டடத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று வந்தனர்.