/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'மெட்ரோ' ரயில் நிலையங்களுக்கு 220 'ஏசி' மினி பஸ் இயக்க திட்டம்
/
'மெட்ரோ' ரயில் நிலையங்களுக்கு 220 'ஏசி' மினி பஸ் இயக்க திட்டம்
'மெட்ரோ' ரயில் நிலையங்களுக்கு 220 'ஏசி' மினி பஸ் இயக்க திட்டம்
'மெட்ரோ' ரயில் நிலையங்களுக்கு 220 'ஏசி' மினி பஸ் இயக்க திட்டம்
ADDED : நவ 03, 2025 11:12 PM
சென்னை:  சென்னையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பிரதான பகுதிகளை இணைக்கும் வகையில், 220 புதிய 'ஏசி' மினி பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மினி பேருந்துகளுக்கான வடிவம் குறித்து, நிறுவனங்களுடன் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது.
சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 20 மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், பயணியர் தேவை அதிகமாக இருக்கிறது. மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், கூடுதல் மினி பஸ்களை இயக்க வேண்டும் என மெட்ரோ ரயில் நிறுவனம், மாநகர போக்குவரத்து கழகத்துக்கு கோரிக்கை விடுத்தது. குறிப்பாக, ஆலந்துார், கிண்டி, திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் வழித்தடம் இடையே இருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்களிலும், 100க்கும் மேற்பட்ட மினி பஸ்களை இயக்க வேண்டும் என பட்டியலையும் அளித்தது.
இதற்கிடையே, மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 220 மின்சார 'ஏசி' மினி பஸ்கள் தனியார் பங்களிப்புடன் இயக்க உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்துவதற்கான, ஆலோசனை கூட்டம் நந்தனத்தில் நேற்று நடந்தது.
இதில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் சித்திக், மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் பிரபு சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள், பஸ் தயாரிப்பாளர்கள் ஏழு பேர் பங்கேற்றனர்.

