/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோர மரக்கன்றுகளுக்கு வேலி அமைத்து பாதுகாப்பு
/
சாலையோர மரக்கன்றுகளுக்கு வேலி அமைத்து பாதுகாப்பு
ADDED : ஆக 11, 2025 12:40 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் - செங்கல்பட்டு சாலையோரத்தில், நடவு செய்துள்ள மரக்கன்றுகளுக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில், பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடம் திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இருவழிச் சாலை, நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று, காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையிலான சாலை விரிவாக்கப் பணியும் மேற்கொள்ளப்படுகிறது.
இச்சாலைகளில், விரிவாக்கப் பணியின் போது, 1,350 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. பசுமை மற்றும் காற்று மாசு தடுக்கும் பொருட்டு அகற்றம் செய்த மரக்கன்றுகளுக்கு மாற்றாக 10 மடங்கு எண்ணிக்கையிலான, 13,500 மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
அதன்படி, வாலாஜாபாத் - செங்கல்பட்டு நெடுஞ்சாலை மற்றும் வாலாஜாபாத் புறவழிச் சாலையோரத்தில், 2023ல் நெடுஞ் சாலைத் துறை சார்பில் முதற்கட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. அந்த மரக்கன்றுகள் தற்போது பசுமையாக வளர்ந்து செழுமையாக காட்சியளிக்கின்றன.
இந்த மரக்கன்றுகள் பாதுகாப்பாக இருக்க நெடுஞ்சாலைத் துறை சார்பில் தற்போது பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.