/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
போதை பொருள் விற்ற 9 பேருக்கு 'காப்பு'
/
போதை பொருள் விற்ற 9 பேருக்கு 'காப்பு'
ADDED : அக் 18, 2024 08:24 PM
காஞ்சிபுரம்:தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா, கூலிப், கஞ்சா போன்ற பல்வேறு போதை பொருட்கள், பெட்டி கடைகள் முதல் மளிகை கடை வரை அனைத்து இடங்களில் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது.
அவ்வாறு விற்பனை செய்யப்படும், காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். படுநெல்லி, வளத்தீஸ்வரர் தோட்டத்தெரு, திம்மசமுத்திரம், செவிலிமேடு, ஒரகடம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
அப்போது, போதை பொருட்கள் விற்றதாக, புஷ்பராஜ், 28, சுரேஷ், 53, அன்பரசு, 50, ஹரிஷ், 20, ஜெயக்குமார், 20, தாமோதரன், 20, ஜகதீஸ்வரன், 29, ரித்திக்ராஜ், 19, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சித்தார்த் குமார் பெஹரா, 27, ஆகிய ஒன்பது பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

