/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பரந்துார் விமான நிலைய திட்டம் கைவிடக்கோரி வளத்துாரில் ஆர்ப்பாட்டம்
/
பரந்துார் விமான நிலைய திட்டம் கைவிடக்கோரி வளத்துாரில் ஆர்ப்பாட்டம்
பரந்துார் விமான நிலைய திட்டம் கைவிடக்கோரி வளத்துாரில் ஆர்ப்பாட்டம்
பரந்துார் விமான நிலைய திட்டம் கைவிடக்கோரி வளத்துாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 24, 2025 01:18 AM

காஞ்சிபுரம்:பரந்துார் விமான நிலைய திட்டத்தை கைவிடக்கோரி, வளத்துார் கிராம குடியிருப்போர் மற்றும் விவசாயிகள் நல கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராம மக்கள், 1,087 நாள் இரவு காத்திருப்பு போராட்டம்; திட்ட அலுவலகத்தில் மாட்டு வண்டியில் சென்று எதிர்ப்பு தெரிவித்து மனு அளிக்கும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதை தொடர்ந்து, பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு கையக்கப்படுத்தும் நிலங்களுக்கு சரி சமமான இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என, குணகரம்பாக்கம் கிராமத்தினர் சமீபத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பரந்துார் விமான நிலைய திட்டத்தை முற்றிலும் கைவிடக்கோரி கடந்த 15ம் தேதி, பல்வேறு கட்சியினர் ஏகனாபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து கிராமத்தினரும், ஒருங்கிணைந்து ஓரணியில் போராட்டம் நடத்துவோம் மற்றும் பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என, பரந்துார் விமான நிலைய திட்ட போராட்டக் குழுவினர் சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
நேற்று, வளத்துார் ஊராட்சி அலுவலக கட்டடம் அருகே, பரந்துார் விமான நிலைய திட்டத்தை கைவிடக் கோரி வளத்துார் குடியிருப்போர் மற்றும் விவசாயிகள் நல கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.