ADDED : பிப் 04, 2024 06:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : தமிழ் வளர்ச்சித்துறை, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பில், காஞ்சிபுரம் பி.டி.வி.எஸ்., துவக்கப் பள்ளியில் பயிலும் மாணவ - மாணவியருக்கு, நற்றமிழ் அறிவோம் என்னும் துாய தமிழ் அகராதி நேற்று வழங்கப்பட்டது.
இதில், அகர முதலி இயக்குனர் முனைவர் கோ.விசயராகவன் மாணவ - மாணவியருக்கு அகராதியை வழங்கினார்.
சுற்றுச்சூழலில் உள்ள வாழ்வியல் சொற்களையும் பொருள் உணர்ந்து தமிழில் பேச வேண்டும். அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களின் பெயர்களைத் தமிழில் பொருள் உணர்ந்து, அகராதியில் குறிப்பிட்டுள்ளவாறு சொற்களை பேசி பழக வேண்டும் என, எடுத்துரைத்தார்.