/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நீர் வழித்தடம் ஆக்கிரமிப்பு கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்
/
நீர் வழித்தடம் ஆக்கிரமிப்பு கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்
நீர் வழித்தடம் ஆக்கிரமிப்பு கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்
நீர் வழித்தடம் ஆக்கிரமிப்பு கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்
ADDED : ஜூலை 02, 2025 12:39 AM

காஞ்சிபுரம்:நீர் வழித்தடத்தை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்து, சுற்றுசுவர் அமைக்கப்பட்டுள்ளதாக, காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த, கோனேரிகுப்பம் ஊராட்சியில், காரப்பேட்டை கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில், நீர் வளத்துறை கட்டுப்பாட்டில் பொன்னேரி ஏரி உள்ளது. இந்த ஏரி உபரி நீர், காரப்பேட்டை கிராமத்தில் இருக்கும் இரட்டை குளம், அல்லிகுளம் உள்ளிட்ட குளங்களின் வழியாக திருமால்பாடி ஏரி செல்லும் நீர் வழித்தடம் செல்கிறது.
இந்த நீர் வழித்தடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து, தனியார் வீட்டுமனை பிரிவுக்கு சுற்றுச்சுவர் அமைத்துள்ளார். மாவட்ட நிர்வாகத்திடம் கிராம மக்கள் அளித்த புகாருக்கு எவ்வித பதிலும் இல்லை என, கிராம மக்கள் புலம்பி வருகின்றனர்.
இதுகுறித்து, காரப்பேட்டை கிராமத்தினர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியதாவது:
பொன்னேரியம்மன் கோவில் அருகே, கிராமத்தினர் பயன்படுத்தி வந்த ஒரு ஏக்கர் நிலம் இருந்தது. இதை தனி நபர் ஒருவர், எங்களுக்கு சொந்தமானது என, ஆக்கிரமித்து கற்களை நட்டுள்ளார். மேலும், 30 அடி அகலத்தில் செல்லும் கால்வாய் குறுக்கே கற்களை நட்டு, மதில் சுவர் எழுப்பி நீர் வழித்தடத்தை மறைத்து உள்ளார்.
பல ஆண்டுகளாக கிராம மக்களின் பயன்பாட்டில் இருக்கும் நிலத்தை மீட்டு, விளையாட்டு திடல் அமைக்கவும். அரசு கட்டடங்கள் கட்டிக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.