/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மக்கள் குறைதீர் கூட்டம் 310 மனுக்கள் ஏற்பு
/
மக்கள் குறைதீர் கூட்டம் 310 மனுக்கள் ஏற்பு
ADDED : அக் 27, 2025 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில், 310 பேர், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.
இதில், பட்டா, வேலைவாய்ப்பு, உதவித்தொகை, ஆக்கிரமிப்பு என பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 310 பேர் மனு அளித்தனர். மாற்றுத்திறனாளிகளிடம் சென்று, கோரிக்கை மனுக்களை, கலெக்டர் கலைச்செல்வி பெற்றுக் கொண்டார்.
மனுக்களை பெற்றுக் கொண்டதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க, கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தினார்.

